எம்.ஜி. ஆருக்கும் எம்.ஆர். ராதாவிற்கு என்ன பிரச்சனை! கடனால் ஏற்பட்ட விபரீதம்.. REWIND

mgr rewind mrradha
By Edward Jan 25, 2022 07:05 AM GMT
Report

தமிழ் சினிமாவின் 60 ஆண்டுகளில் புரட்சி தலைவர் மற்றும் நடிகர் திலகத்திற்கு இணையாக பேசப்பட்டவர் நடிகவேல் எம் ஆர் ராதா. தன் கருத்து பேச்சாலும் கம்பீரமான குரலாலும் அனைத்து மக்களை கவர்ந்திருந்தவர். நண்பர்களாக ஆரம்பத்தில் இருந்த எம் ஆர் ராதா மற்றும் எம் ஜி ஆர் கடைசியில் கடன் பிரச்சனையால் விரோதிகளாகினார்கள்.

சபாஷ் மாப்பிள்ளை படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தனர். படங்களில் கட்சி சின்னத்தை கொண்டு வராதீர்கள் என்று எம்ஜிஆரிடம் கூறி பிரச்சனையை ஆரம்பித்துள்ளார் ராதா.

பின் இடையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இருவரும், பெற்றாதான் பிள்ளையா படத்தின் போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். படத்தினை தயாரிக்க 1 லட்சம் மதிப்பில் செலவு செய்ததாக கூறப்பட்டது.

அதை வாங்க எம் ஆர் ராதா எம்ஜிஆரை சந்திக்க சென்றுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு எழுந்து செல்ல இருந்த எம் ஆர் ராதா கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து எம்ஜிஆரை நோக்கி சுட்டுள்ளார்.

சுதாரித்துகொண்ட எம்ஜிஆர் விலக காதில் தோட்டா பாய்ந்தது. இதனால் எம் ஆர் ராதாவும் தன்னை தானே சுட்டுகொண்டார் இது பிரச்சனையாகி இருவரும் நலமடந்தனர். பின் எம் ஆர் ராதாவிற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர்.