முத்தக்காட்சியில் விளையாடிய கமலை பந்தாடிய எம்ஜிஆர்!! அவரே அப்படித்தான்னு விமர்சித்த பத்திரிக்கையாளர்
உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன், தான் நடிக்கும் படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் முத்தக்காட்சியாவது இருக்க வேண்டும் என்று கூறுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி அந்த காலத்தில் இருந்து சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் படம் வரை கமல் முத்தக்காட்சியில் பின்னிபெடலெத்து இருப்பார். கமல் ஹாசன் முத்தக்காட்சிகளை விரும்புவது ஏன் என்றும் எம்ஜிஆர் படத்திலும் ஆபாச காட்சி இருந்தது பற்றியும் பகிந்துள்ளார் பிரபல விமர்சகர் டாக்டர் காந்தராஜ்.
மேலும் கமலுக்கு டஃப் கொடுக்கும் கிளாமர் காட்சியில் எம்ஜி ஆர் நடித்திருக்கிறார் என்று டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார். 80களில் நடிகைகள் கமல் ஹாசனுடன் நடிக்க பயப்பட்ட காலத்தில் டி என் பாலு இயக்கத்தில் சட்டம் என் கையில் படத்தில் ஸ்ரீவித்யா நடித்திருப்பார். அப்படத்தின் கமல் ஒரு முத்தக்காட்சியில் நடித்திருந்தார்.
அப்போது எம்ஜிஆருடன் டி என் பாலுவுக்கு கருத்து வேறுபாடு இருந்தது வந்தது. எம்ஜிஆர் ஆட்சியை பிடித்து முதலமைச்சராகி நன்றி கூறி ஒரு விழா நடத்தினார். அங்கு அப்படத்தின் ஓடிவிலையாடு பாப்பா போஸ்டரை எம்ஜிஆர்-க்கு தெரியுமாறு டி என் பாலு ஒட்டியிருந்தார்.
இதனால் கோபமான எம்ஜிஆர் முத்தக்காட்சியை நீக்க போராட்டமே நடத்தினார். பின் அந்த காட்சியை நீக்கிவிட்டார்கள். மேலும் புன்னகை மன்னன் படத்தில் ரேகாவுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்படி கவர்ச்சி காட்சிகளை எதிர்த்த எம்ஜிஆர், இதயக்கனி படத்தில் செய்யாத சேட்டையா, என்னை விட்டால் பாடலுக்கு அப்படியொரு ஆபாச வார்த்தைகளோடு சேர்ந்து நடிகையுடன் கவர்ச்சி ஆட்டம்போட்டு இருப்பார். பாலு மீது இருந்த கோபமே தவிர கமல் மீது எம்ஜிஆர் தனிப்பட்ட கோபத்தில் போராட்டம் செய்யவில்லை என்றும் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.