ஸ்பைடர் மேனுக்கே டஃப் கொடுப்பாரோ! மின்னல் முரளி எப்படியான கதை!..

minnal murali
By Edward Dec 27, 2021 05:10 AM GMT
Report

என்னதான் ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படம் வந்தாலும் அதற்கான மதிப்பு இந்திய படங்களில் காணப்படுகிறது. அப்படி எப்போது ஹாலிவுட் படத்தினை போன்று எடுப்பார்கள் தென்னிந்திய சினிமாவில் என ரசிகர்களின் காத்திருப்புக்கு வரவேற்பை பெற்றுள்ளதா? என்பது கிடையாது. முகமூடி, எந்திரன், கந்தசாமி, கிரிஷ், வேலாயுதம் போன்ற காமிக்ஸ் படங்கள் வெளியாகி தோல்வியை சந்தித்தது. அதை உடைத்து காட்ட மலையாளத்தில் உருவாகி வெளியாகியது மின்னல் முரளி.

டோவினோ தாமஸ் நடிப்பில் இயக்குனர் பேசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ளது மின்னல் முரளி படம். பல மொழிகளில் டப் செய்துள்ள இப்படத்தின் கதை ஸ்பைடர் மேன் அளவிற்கு சிறந்ததா என்பதை பார்ப்போம். 90களில் நடக்கும் காலகட்டத்தை மையமாக எடுக்கப்பட்டதால் அந்தகாலத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

ஒரு டைலர் கதாபாத்திரம் தான் ஹீரோவின் வேலை. காதல் தோல்வியால் அமெரிக்கா செல்லும் முயற்சியில் சில காரணத்தால் திருமணமாகிய பெண்ணை சந்திப்பதும், அதேபோல் வில்லனும் அந்த பெண்ணை தேடுவதுமான கதையாக அமைந்துள்ளது. 700 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஓர் அறிய நிகழ்வினால் சக்தி வாய்ந்த மின்னல் இருவரையும் தாக்கி விடுகிறது.

இருவரின் உடலில் சில மாற்றங்கள் தெரியத் தொடங்குகின்றன. இருவரும் செய்யும் செயல்களின் விளைவு, ஒருவரை ஒருவர் தேடும் படி ஆகிறது. இருவரும் சந்திக்க பின்னர் வருகிறது கிளைமாக்ஸ். அசத்தலான சண்டையுடன் வில்லனை அழித்து ஊரை காக்கிறார் ஹீரோ மின்னல் முரளி. அனைவருக்கும் பிடித்தமான எடிட்டிங் வேலைகள் அமைந்துள்ளது.

90ஸ் கிட்ஸ்களுக்கு புரிந்தமாதிரியும் இருக்கும் ஆனால் தற்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கான கதையாக அமையுமா என்பது கேள்விக்குறி தான். சிறப்பான பின்னணி இசை, அம்சமான எடிட்டிங் மிகப்பெரிய ப்ளஸ். படத்தின் ஓடும் நேரம், மற்றும் சுமார் கிராபிக்ஸ் மைனஸ் என சொல்லலாம். ஸ்பைடர் மேன் படத்தின் பல காட்சிகளை இப்படம் நமக்கு நினைவூட்டுகிறது.

இப்படத்தினை வெள்ளித்திரையில் பார்த்திருக்கும் பட்சத்தில் செம்ம ட்ரீட் ஆக அமைந்திருக்கும். ஹீரோ மற்றும் வில்லன் இருவருக்குமே மிக வலுவாக பின்னணிக் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் இருவருமே சராசரி மனிதனுக்குரிய இயல்பான குணநலன்களுடனேயே இருக்கின்றனர்.

சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் அவர்களை அவரவர் பாதைகளை தேர்ந்தெடுக்க வைக்கிறது என்பதை பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்துள்ளார் இயக்குனர். மொத்தத்தில் மின்னல் முரளி மின்னலாக வந்து இடியையும் கொடுத்துள்ளார். மதிப்பெண் - 2.75.