ஓட்டலுக்கு காசு கொடுக்காமல் எஸ்கேப்பான தயாரிப்பாளர்! சிக்கி தவித்த நடிகர்கள்..
jiiva
mirchisiva
kolmal
kalakalappu2
By Edward
நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் ஜீவாவும் இணைந்து கோல்மால் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மொரிஷியஸில் நடைபெற்றுள்ளது. ஒரு ஓட்டலில் நட்சத்திரங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் அனைவரும் செல்லும் போது ஓட்டல் நிர்வாகம் யாரையும் அனுப்ப முடியாது என்று கூறியுள்ளார்களாம். அதற்கு காரணம் தயாரிப்பாளர் அந்த ஓட்டலின் வாடகையை கொடுக்காமல் எஸ்கேப்பாகியுள்ளாராம்.
இதனால் மிர்ச்சி சிவா உள்ளிட்ட சிலர் அந்த ஓட்டலிலேயே இருந்துள்ளனர். அதில் காமெடி நடிகரும் இயக்குனருமான மனோ பாலாவும் இருந்துள்ளார். இப்படி நடக்கும் என்று நினைத்து இரு நாட்களுக்கு முன்பே வேறு காரணம் சொல்லி எஸ்கேப் ஆகியுள்ளார் மனோபாலா.