சர்ச்சைக்குரிய ஆன்மீக பேச்சாளருடன் காதல்!! நடிகை மிருணாளினி வெளியிட்ட புகைப்படம்...
மிருணாளினி ரவி
டிக்டாக், டப்ஸ்மாஷ் போன்ற செயலிகளில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை மிருணாளினி ரவி. இதன்மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர் சாம்பியன், எனிமி, எம் ஜி ஆர். மகன், ஜாங்கோ, ரோமியோ, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் மிருணாளினி, இன்ஸ்டாகிராமில் தன் காதலரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தன் காதலரை இறுக்கமாக கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, உன்னை நேசிப்பது இறுதியாக என்னை நானே நேசிப்பது போல் உணர்கிறேன்.

ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன் என உருகி உருகி காதலோடு பதிவிட்டுள்ளார். இந்நிலையில் மிருணாளினி காதலிப்பவர் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆன்மீக பேச்சாளரான மகா விஷ்ணு, கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மறுபிறப்பு மற்றும் கர்மா, பாவ புண்ணிய பலன்கள் குறித்து பேசினார். மேலும் மாற்றுத் திறனாளியாக பிறக்க முன் ஜென்ம பாவங்களே காரணம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் சங்கர் என்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர்.
இதனால் மகா விஷ்ணுவுக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.