தெருவில் போறவங்கள கூப்பிட்டு உட்கார வெக்கல!! கலா மாஸ்டர் சர்ச்சைக்கு கோபத்தில் நடிகை குஷ்பூ...
குஷ்பூ -
கடந்த மாதம் 72வது தேசிய திரைப்பட விருதுகான பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் சோசியல் மீடியாகளில் பேசும் பொருளாகவே இருந்த வருகிறது. குறிப்பான நடிகை தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் கேப்டம் மில்லர் படத்திற்காக தனுஷுக்கு சிறப்பு நடிகர் அங்கீகாரம் கிடைத்ததும் ரசிக்ர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை உருவாக்கியது.

இந்நிலையில் தேசி விருது தேர்வு குழுவில் ஜூரியாக இருந்ததும் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதில், ஒரு விருது கிடைக்கிறது என்றால் என்ன காரணம் இருக்கும். தேசிய விருது படத்திற்கு கிடைத்திருக்கிறது என்றால் அப்படத்தில் ஏதோ ஒரு விஷயம் தேர்வு குழுவினரை ஈர்த்திருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விதிமுறைகள் இருக்கிறது. சிறந்த இயக்குநர் பிரிவில் போட்டியிடும் படங்கள் அனைத்தையும் ஒப்பிட்டு பார்த்தப்பின் தான் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. இந்த குழுவில் திரைப்படத் துறையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் தான் இருக்கிறார்கள்.
தெருவில் போறவங்கள
தெருவில் போகிறவர்களை கூப்பிட்டு அங்கே உட்கார வைக்கவில்லை. ஒரு படம் நமக்கு பிடித்திருக்கலாம், ஆனால் தேசிய விருது குழுவில் இருக்கும் அனைவருக்கும் அப்படம் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் நமக்கு பிடிக்காத படம் அவர்களுக்கு பிடித்திருக்கலாம், அதுதான் தேர்வு குழுவின் முடிவு. நான் சின்னத்தம்பி போன்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தில் நடித்திருக்கீறேன்.

அப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை, அதற்காக ஏன் எனக்கு தரவில்லை என்று நான் கேள்வி கேட்க முடியுமா? தேர்வு குழுவில் பார்வையில் வேறு நடிகையின் நடிப்பு பெட்டராக இருந்ததாக நினைத்து இருக்கலாம். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கலா மாஸ்டருக்கு என்ன தகுதி என்று கேட்கிறார்கள். ஆனால் அவரே தேசிய விருது பெற்றபோது யாரும் இந்த கேள்வியை எழுப்பவில்லை. அப்போது அவர் திறமையானவர் என்று ஏற்றுக் கொண்டார்கள்.
இப்போது ஜூரியாக இருந்ததற்கு மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள். ஒரு பெண் அந்த பொறுப்பில் இருப்பதால்தான் இவ்வளவு தாக்குதலா? அதுதான் எனக்கு தோன்றுகிறாது. இது தவறானஅணுகுமுறை என்று கோபத்துடன் பேசியுள்ளார்.