ரஜினியை தவறாக பேசினாரா மனோரமா? அதுவும் இந்த மறைந்த நடிகையின் திட்டத்தோடு நடந்ததாம்..

rajini jeyalalitha superstar annamalai manoramma
By Edward Sep 22, 2021 09:56 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடும் பல ஆண்டிகளாக தன்னுடைய மார்க்கெட்டை இளமையுடன் வைத்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் பெரிய நட்சத்திரங்கள் என்றாலும் ஒருசில விமர்சனங்களில் சிக்குவது வழக்கம்.

அப்படியாக பிரபல நடிகை ஒருவர் மறைந்த நடிகை ஜெயலலிதாவுடன் சேர்ந்து ரஜினியை தரக்குறைவாக பேசியுள்ளதாக நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதுவேறு யாரும் இல்லை, நம்மல் ஆச்சி மனோரம்மாவாம். அண்ணாமலை படத்திற்கு பிறகு ஆச்சி மனோரமாவின் சினிமா வாழ்க்கை நல்ல நிலையை தொட்டு நடிப்பில் சிறந்த வாய்ப்பினை பெற்று வந்தார்.

அவர் நடித்த ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும். அப்படி இருக்கையில், மனோரமா மேடைப்பேச்சு ஒன்றில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து ரஜினியை ஒரு முறை தரக்குறைவாக பேசியுள்ளார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.

பின்பு ரஜினிகாந்த் தனது படத்திற்கு ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மனோரமாவிடம் கூறியுள்ளார். அவரும் அந்த விஷயத்தை மறந்துவிட்டு ரஜினி சொன்னதால் அண்ணாமலை படத்தில் நடித்துள்ளார்.