அட்ஜெஸ்ட் பண்ண சொல்றாங்க!! இன்ஃபெக்ஷன் ஆகிவிட்டது!! நடிகை அம்மு அபிராமிக்கு நடந்த சம்பவம்
2017ல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தில் மெடிக்கல் காலேஜ் மாணவிகளில் ஒருவராக நடித்து நடிப்பை ஆரம்பித்தவர் தான் நடிகை அம்மு அபிராமி. இதன்பின், என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் சிறு ரோலிலும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியின் தங்கையாகவும் நடித்திருந்தார். பின் ராட்சசன், துப்பாக்கி முனை, அசுரன், யானை, தண்டட்டி உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
சிறு ரோலில் இருந்து தற்போது கதாநாயகியாக நடித்து வரும் அபிராமி சமீபத்தில் கண்ணகி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். தற்போது ஹாட் ஸ்பாட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தில் ஆரம்பத்தில் கதையை கேட்டு வேண்டாம் என்று கூறிவிட்டேன். அதன்பின் விக்னேஷ் கார்த்திக் விவரமாக கதையை புரிய வைத்தப்பின் ஓகே சொல்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த பிரச்சனை குறித்து பேசியிருக்கிறார். பல கோடி செலவு செய்து படத்தை எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பிற்கு வெளியே செல்லும் போது சரியான கழிவறை வசதி கூட இல்லாமல் அவதிப்படுவதாக கூறியிருக்கிறார். பாத்ரூம் போகவும் உடையை மாற்றவும் மிகுந்த சிரமமாகவும் இது குறித்து கேட்டால் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.
பாத்ரூம் விசயத்தை எப்படி சகித்துக்கொள்ள முடியும் என்று எனக்கு தெரியவில்லை என்றும் முடிந்தவரை ரெடிமேட் டாய்லெட் ஆவது ஷூட்டிங்கில் கட்டாயம் செயல்படுத்த் வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போவதால் தனக்கு இன்பெக்ஷன் ஆகிவிட்டதாகவும் முன்னணி நடிகை நடிகர்களுக்கு மட்டுமே கேரவன் வைக்கிறார்கள் என்றும் துணை நடிகர் நடிகைகளுக்கும் வளரும் நடிகைகளுக்கும் அடிபடை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.