'ஒரு சூரியன்,ஒரு உலகம், ஒரு நரேந்திர மோடி'யாம்..என்னென்ன சொல்ராங்க பாருங்க!!!
ஐ.நா.,வின் (UN - United Nations) 26வது பருவ நிலை மாநாடான சி.ஓ.பி., 26, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்தது.
இதில், முக்கிய தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றங்கள் குறித்து பல முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 'இந்த பருவ நிலை மாற்றத்தை கையாள ஒருவர் இருக்கிறார். ஒரு மணி நேர சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி ஒரு வருடம் மின் சக்தியை பெற முடியும் என்று உலகிற்கு புரிய வைத்தவர்.
அவர்தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு நரேந்திர மோடி,' எனப் புகழ்ந்து பேசியதைக் கேட்டு அனைவரும் கோஷம் எழுப்பினர். வெளிநாட்டில் மோடியை புகழ்ந்து பேசியிருப்பதை தற்போது உள்ளூர் வாசிகள் இணையத்தில் meme ஆக போட்டு ஷேர் செய்து வறுகின்றனர்.