சாதி மறுப்பு திருமணம்.. அப்படி என்ன சாதிக்க போறீங்க!! கடுப்பான மோகன் ஜி
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மதன், உதய தாட்சாயினி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
ஆனால் எதிர்ப்பை மீறி கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தலைமையில் திருமணம் நடந்தது. ஆத்திரமடைந்த பெண் வீட்டார், அதிரடியாக அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக பேசிய இயக்குனர் மோகன் ஜி, இந்த நிலையை கடந்த பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும் இது எந்த மாதிரியான வலி என்று.. பெற்றவர்களை இப்படி புரண்டு அழ வைத்து அப்படி என்ன தான் சாதிக்க போறீங்க தம்பி, தங்கைகளே.. அவர்களை சம்மதிக்க வைத்து உங்கள் காதலை கைகூட செய்யுங்கள்.. அதுவே உண்மையான காதல் என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.