நீச்சல் உடையணிந்து நடிக்க வற்புறுத்தினார்கள்!! பிரபல நடிகை மோகினி ஓபன் டாக்...
நடிகை மோகினி
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை மோகினி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன்னை நிர்பந்தப்படுத்தி நீச்சல் உடையணிந்து கிளாமர் காட்சியில் நடிக்க வைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில், ஆர் கே செல்வமணி இயக்கத்தில் கணமணி என்ற படத்தில் நீச்சல் உடை காட்சியில் நடிக்க மிகவும் சங்கடப்பட்டேன். திடீரென வந்து நீச்சல் உடையில் நடிக்க சொன்னார்கள். அந்தக்காட்சியில் நடிக்க முடியாது என்று அழுதேன்.
அதனால் படப்பிடிப்பு பாதிநாள் தடைப்பட்டது. நீச்சல் தெரியாது என்பதை விளக்க முயன்றேன். ஆண் பயிற்சியாளர்கள் முன் நீச்சல் உடையணிவது எனக்கு சங்கடமாக இருந்தது.
அப்போது பெண் பயிற்சியாளர்கள் இல்லாததால், அந்தக்காட்சியில் நடிக்கவே முடியாது என்று சொன்னேன். பாடல் காட்சிக்காக தான் அப்படி நடிக்க சொன்னார்கள், பாதி நாள் கழித்து, அவர்கள் கேட்டதை நான் செய்தேன். பின் ஊட்டியில் மீண்டும் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றார்கள். நான் மறுத்தேன்.
அப்போது படப்பிடிப்பை தொடரமுடியாது என்றார்கள். அதற்கு நான், அது உங்கள் பிரச்சனை, எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, நீங்கள் என்னை முன்பு அந்தக்காட்சியில் நடிக்க வற்புறுத்தியது போலத்தான் இதுவும் என்று சொன்னேன் என்று மோகினி தெரிவித்துள்ளார்.
வாரணம் ஆயிரம்
மேலும், வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரன் ரோலில் நடிக்க இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் என்னை தான் முதலில் அணுகினார். ஆனால் நான் நோ சொல்லிவிட்டேன், ஏனென்றால் சினிமாவில் நடிக்கக்கூடாது என்ற முடிவில் நான் உறுதியாக இருந்தேன். அதை இயக்குநர் கெளதம் மேனனும் புரிந்து கொண்டார்.
பின் சிம்ரனை அந்த ரோலில் நடிக்க வைத்தார்கள். என் தம்பி மனைவி, சூர்யாவின் தீவிர ரசிகை, நான் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததை அறிந்து அவர் என்மீது கோபப்பட்டதாக மோகினி தெரிவித்துள்ளார்.