கல்யாணம் பண்ணிக்கலாமா-னு விவேக் கேட்டாரு!! பல ஆண்டு ரகசியத்தை கூறிய நடிகை
நடிகை மோகினி
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக 90ஸ்-களில் வலம் வந்தவர் நடிகை மோகினி. இவர் ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
திரையுலகில் பிசியாக நடித்து வந்த இவர் கடந்த 1999ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் நடிகை மோகினி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மறைந்த நடிகர் விவேக் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், விவேக்கிற்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இருந்து என்கூட நடிச்சிட்டு இருந்தார். ஒருமுறை பேசாமா நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டார்.
நான் என்ன கிண்டல் பண்றீங்களான்னு சிரிச்சிட்டேன். அவரு சும்மா தான் கேட்டார், அதனால நான் எவ்ளோ எமோஷ்னலா மனசையே உங்க கிட்ட கொடுக்கலாம்னு பார்த்தேன், இப்படி சிரிச்சி கவுத்துட்டீங்களேன்னு கிண்டல் பண்ணிட்டு இருப்பார் என்று மோகினி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.