அம்மா தங்கச்சி கிட்ட கேளு! டூ பீஸ் புகைப்படத்திற்கு முகம் சுழிக்க வைத்த கேள்வி! ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த 36 வயது நடிகை
தமிழ் சினிமாவில் 2004ல் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா மணி. இதையடுத்து அது ஒரு கனாகாலம், மது போன்ற படங்களில் நடித்து வந்த பிரியாமணி நடிகர் கார்த்தியின் பருத்தி வீரன் படத்தில் நடித்து பல விருதுகளை வாங்கினார். இதையடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என நடித்து வந்த பிரியா 2017ல் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிப்பதை நிறுத்திய பிரியா மணி தற்போது 6 படங்களுக்கு மேல் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், விருது விழா ஒன்றிற்கு சென்ற நடிகை பிரியா மணி கருப்பு நிற சேலையில் க்ளாமரான ஆடையை அணிந்து வந்துள்ளார். இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதில் ஒரு இளைஞர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிரியா மணி, எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, அதற்கு என் கணவர் சம்மதித்தால் போதும் என்று பதிலளித்துள்ளார். மேலும், ஒரு இளைஞர் நிர்வாண புகைப்படத்தை கேட்டுள்ளார்.
அதற்கும் பதிலளித்த பிரியா மணி, முதலில் உங்க சகோதரி, அம்மாவிடம் கேளு, அவர்கள் செய்தால் நான் பதிவிடுகிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது பிரியாமணியின் பதில்.
