நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' டீசர்

Nayanthara
By Karthick Raja Sep 14, 2026 01:30 PM GMT
Report

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவாகி இருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தில் ரெஜினா, சினேகா, குஷ்பூ, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். மேலும், ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் இப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.