சேலையில் மின்னும் மூன்று முடிச்சு சீரியல் நாயகி ஸ்வாதி கொண்டே!! புகைப்படங்கள்..
வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளும் டாப் இடத்தினை பிடித்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அந்தவகையில், கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஸ்வாதி கொண்டே, கன்னட படத்தில் நடித்து பின் தமிழ்நாட்டு பக்கம் வந்தார்.
விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்வாதி. பிரியா ரோலில் நடித்த ஸ்வாதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
2024ல் இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், சன் டிவியில் மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க துவங்கினார். தற்போது சிறப்பாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வரும் ஸ்வாதி கொண்டே, சேலையில் மின்னும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.









