AI மார்பிங் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டிய நபர்!! வெளுத்து வாங்கி பதிலடி கொடுத்த பாடகி சின்மயி..
பாடகி சின்மயி
பின்னணி பாடகியாக திகழ்ந்து வரும் பாடகி சின்மயி, பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளை இணையத்தில் பகிர்ந்து தன்னுடைய கருத்துக்களை முன் வைத்து வருகிறார். எக்ஸ் பக்கத்தில், நடிகை ஒருவரின் மார்பிங் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்திருந்தனர்.
இதை பார்த்த சின்மயி தனது கண்டனங்களை தெரிவித்தது மட்டுமில்லாமல் காவல்துறையை நேரடியாக டேக் செய்து புகாரளித்துள்ளார். இதையடுத்து நடைபெற்ற சம்பவம் தான் சின்மயியை மேலும் ஆத்திரப்படுத்தியுள்ளது.

அதாவது சின்மயி காவல்துறையில் புகாரளித்ததும் அந்த எக்ஸ் பக்கத்தில் சின்மயி-யின் மார்பிங் மற்றும் ஏஐ புகைப்படங்களை பகிர்ந்து, சின்மயியை மோசமாக விமர்சித்து கேப்ஷன் போட்டிருந்தார்கள். அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்த சின்மயி, மிகவும் மோசமாக கமெண்ட் செய்தவர்களின் புகைப்படங்களியும் சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து எடுத்து, பின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் காட்டமாக பேசியுள்ளார்.
தைரியமாக செயல்படவேண்டும்
அதில், பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கிப்போக வேண்டும் என்ற எண்ணம் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பலருக்கும் உள்ளது. அப்படி அடங்கிப் போக வேண்டும் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கும் அவர்களை எதிர்த்து பேசும் பெண்களையும் அவர்கள் தொடர்ந்து ஏதாவது சித்தரிக்கொண்டேதான் இருப்பார்கள். உதாரணத்திற்கு முன்பெல்லாம் பேய், வசியம் செய்பவள் என்று எல்லாம் சொல்லி வந்தார்கள். ஆனால், இன்று ஏஐ மூலம் மார்பிங் செய்து வருகிறார்கள்.

இந்த குரூர புத்திக்கொண்ட நமது குடும்பத்தினரோ பயப்படத்தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் நாம் தைரியமாக வேண்டும். குடும்பத்தினரை தைரியப்படுத்த வேண்டும், இந்த அயோக்கியர்களுக்கு எதிராக தைரியமாக செயல்படவேண்டும் என்று சின்மயி பேசியுள்ளார். அவரது அந்த பதிவிற்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.