ரூ. 50 கோடி பிரைவேட் ஜெட்!! கோடிகளில் புறளும் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு..
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் நடிகை நயன் தாரா. சமீபத்தில் தன் கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருந்தார்.
பல கோடி சம்பளமாக பெற்று வரும் நயன் தாரா, நடிப்பை தாண்டி பல தொழில்களில் ஈடுபட்டும் சம்பாதித்து வருகிறார். தற்போது நயன் தாராவின் சொத்து மதிப்பு, ஆடம்ப வீடு உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
- ஹைதராபாத் பஞ்சாரா ஹில்லில் நயன் தாராவுக்கு சொந்தமாக 2 அப்பார்ட்மெண்ட் உள்ளது. அதன் மதிப்பு தலா ரூ. 15 கோடியாம்.
- கேரளாவில் இருக்கும் பூர்வீக வீடு, சென்னை, மும்பையில் இருக்கும் வீடுகளின் மதிப்பு ரூ. 100 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
- ரூ. 50 கோடி மதிப்பிலான பிரைவேட் ஜெட் ஒன்றினை நயன் தாரா, தன் திருமணத்திற்கு பின் வாங்கி பயணித்து வருகிறார்.
- ரூ. 3 கோடி மதிப்பிலான Mercedes Maybech GLSD, BMW 5 series உட்பட பல கார்கள் கலெக்ஷனை வைத்துள்ளார்.
திருமணத்திற்கு பின் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 2021ல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகிறார்.
சரும தயாரிப்பு, சானிட்டரி பேட், உணவுத்துறையில் ஏராளமான முதலீடுகள் செய்தும் ஆயில் பிசினஸில் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் முதல் 12 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். தற்போது நயன் தாராவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.