இந்த லிஸ்ட்டில் விஜய் தான் பர்ஸ்ட்!! நெருங்க முடியாமல் திணறும் அஜித்குமார், சூர்யா..

Vijay Actors Varisu
By Edward Jun 25, 2022 07:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்தார். படம் படுமோசமான விமர்சனத்தை பெற்றதோடு லாஜிக் மீரல்களால் எடுக்கப்பட்ட காட்சியை கலாய்த்து பலர் இணையத்தில் பல வீடியோக்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வந்தனர்.

பீஸ்ட் டு வாரிசு

இதனைதொடர்ந்து தளபதி 66 படத்தில் வம்சி இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கான படப்பிடிப்பு ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் தளபதி 66 படத்தின் டைட்டில் வாரிசு என்று பெயர் கொடுத்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மூன்று போஸ்டர்கள் வெளியிட்ட படக்குழுவினர் இணையத்தையே தெரிக்கவிடும் படியாக விஜய்யின் பிறந்த நாள் ட்ரீட்டாக அமைத்தனர்.

இந்தியாவில் டாப் இடத்தில் விஜய்

இந்நிலையில் கடந்த மே மாதம் மட்டும் அதிகம் மக்களால் பாப்புலர் ஆன நடிகர்கள் லிஸ்ட்டில் நடிகர் விஜய் முதல் இடத்தினை பிடித்துள்ளார். பல மாதங்களாக ஆக்கிரமித்து வரும் விஜய் இந்த முறையும் முதல் இடத்தினை தக்கவைத்து வருகிறார்.

மேலும் இந்தியளவில் தனியார் இணையம் எடுத்த இந்த கணக்கெடுப்பில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 5 இடத்தினை பிடித்துள்ளது தான் ஷாக் கொடுத்துள்ளது. இதற்கு காரணம் மே மாதம் இவர் நடிப்பில் வெளியான சாம் ராட் பிரித்திவி ராஜ் படத்தின் படுதோல்வி தான் காரணம்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமாரையே இறக்கி விட்டு தென்னிந்திய நடிகர்கர்கள், விஜய், பிரபாஷ், யஷ், அஜித்குமார் வரிசையில் 5 வது இடத்தினை பிடித்திருக்கிறார். இவர்களை அடுத்து அல்லு அர்ஜுன் 6, என் டி ஆர் 7, மகேஷ் பாபு 8, ராம் சரண் 9 கடைசியில் நடிகர் சூர்யா 10 வது இடத்தினை பிடித்துள்ளார்.