19 வயதில் சீரியலில் நெருக்கமான காட்சி!! ரவீனா தாஹாவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்
Star Vijay
Serials
By Edward
தமிழில் விஷ்ணு விஷால், அமலாபால் நடித்து நல்ல வரவேற்பு பெற்ற படம் ராட்சசன். இப்படத்தில் குட்டி நட்சத்திரங்கள் பலர் அறிமுகமாகி நடித்தனர்.
அதில் பள்ளி சிறுமியாக சிறு ரோலில் நடித்தவர் ரவீனா தாஹா. நடிகர் விஜய்யின் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமானார்.
இதன்மூலம் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் மெளன ராகம் 2 சீரியலில் சத்யாவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சீரியல் ஹனிமூன் சென்றுள்ள சத்யா - வருணிடையே நெருக்கமாக படுக்கை காட்சி அமைத்துள்ளனர்.
அதன் பிரமோ வீடியோ வெளியாகிய நிலையில் ரொம்ப ஓவராக போறிங்களே என்று ரசிகர்கள் முகம் சுளித்தப்படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.