நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்யின் விவாகரத்து உண்மையா! அவரே கொடுத்த விளக்கம்
சின்னத்திரையில் மாபெரும் வெற்றிகண்ட சீரியல் நாகினி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை மௌனி ராய்.
இவர் கடந்த 2022ல் அவர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது நடிகை மௌனி ராய் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் மௌனி ராய் தனது கணவரை அன்ஃபாலோ செய்துவிட்டார். அதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. மேலும் மௌனி ராயின் நெருங்கிய தோழியான நடிகை திஷா பாட்னியும் சூரஜ் நம்பியாரை அன்ஃபாலோ செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகை மௌனி ராய் தனது விவாகரத்து பற்றிய செய்திக்கு விளக்கம் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். "தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

எங்களுக்கு தயவு செய்து பிரைவசி கொடுங்கள்" என கூறி இருக்கிறார். Space and Privacy கொடுங்கள் என அவர் கூறி இருப்பதால், விவாகரத்து உண்மை தானோ? என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேட்டு வருகின்றனர்.