என் படுக்கையறை, இளமைப்பருவம் பற்றி கனவு காணாதீங்க!! காட்டமான பதிலடி கொடுத்த கங்கனா...

Gossip Today Indian Actress Kangana Ranaut
By Jai Aug 20, 2026 12:30 PM GMT
Report

கங்கனா ரானாவத்

பிரபல பாலிவுட் நடிகையாகவும் நாடாளுமன்ற உறுப்பினருமான நடிகை கங்கனா ரானாவத், தன்னை சுற்றி எழும் விமர்சனங்கள் குறித்து காரசாரமாக பதிலளித்து வருகிறார். அரசியல், சினிமா என எந்த விவகாரமானாலும் சரி தன் கருத்தை வெளிப்படையாக கூறிவிடுவார் கங்கனா.

என் படுக்கையறை, இளமைப்பருவம் பற்றி கனவு காணாதீங்க!! காட்டமான பதிலடி கொடுத்த கங்கனா... | Kangana Ranaut Post Don T Dream About My Bedroom

சமீபத்தில் கூட மாணவர்களை சாக்கடை தலைமுறை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், பாபா ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கங்கனாவின் தகுதி, குழந்தைப் பருவம், இளமைப்பருவம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பாபா ராம்தேவ்

அவருடைய தகுதி என்ன? அவரது குழந்தைப்பருவம், இளமைப்பருவம் எப்படி இருந்தது? அவரது முந்தைய செயல்கள் எப்படி இருந்தன, இதுபோன்ற நபர்களை பற்றி நான் பேச விரும்பவில்லை என்று காட்டமாக பேட்டியில் தெரிவித்திருந்தார்.

என் படுக்கையறை, இளமைப்பருவம் பற்றி கனவு காணாதீங்க!! காட்டமான பதிலடி கொடுத்த கங்கனா... | Kangana Ranaut Post Don T Dream About My Bedroom

இது கங்கனாவின் கவனத்திற்கு செல்ல, அவர் மீண்டும் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளா. அதில், பாபா ராம்தேவ்-ஐ குறிப்பிட்டு, பாபாஜி, என்னுடைய இளமைப்பருவம், படுக்கையறை குறித்து கனவு காணாதீர்கள், வெறும் வதந்திகள், கிசுகிசுக்களை வைத்து மட்டுமே ஒருவரால் இப்படி யூகிக்க முடியும் என பதிவிட்டுள்ளார்.

மேலும், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தொடர்பாக எழுந்த சர்ச்சையையும் சுட்டிக்காட்டிய கங்கனா, எனக்கு ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க வேண்டாம். போலி மருத்துவ உரிமைக்கோரல்களுக்காக உச்ச நீதிமன்றத்தால் நான் ஒருபோதும் கண்டிக்கப்படவில்லை. இது உறுதியான ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையிலானது.

வதந்திகளின் அடிப்படையில் அல்லா, எனவே எனக்கு ஒழுக்கத்தை பற்றி பாடம் நடத்த வெண்டாம், உங்களைவிட என்னுடைய குணம் எவ்வளவோ மேலானது. இங்கு எந்த ஏமாற்று வேலையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.