"அவரின் ஆன்மாவை கூட மன்னிக்க மாட்டேன்".. பாலுமகேந்திராவின் இரண்டாம் மனைவி பேச்சு!
இயக்குனர் பாலு மகேந்திர இயக்கத்தில் கடந்த 1985 -ம் ஆண்டு வெளிவந்த உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மௌனிகா.
பாலுமகேந்திராவின் சினிமா மீது காதல் வயப்பட்ட மௌனிகா அவர் மீதும் காதல் கொண்டார். 28 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2014 -ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சில வருடங்களில் பாலுமகேந்திரா உடல் நிலை குறைவால் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் மௌனிகா பாலுமகேந்திரா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் , பாலுமகேந்திரா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் "என்னுடைய வயது அதிகம் சுமையை உன்னிடம் திணிக்க நான் விரும்பவில்லை இதனால் நாம் பிரிந்து விடுவோம் எனக் பாலுமகேந்திரா கூறினார். ஆனால் இது உண்மையான காரணம் இல்லை.
எதற்காக பிரிந்தோம் என்ற காரணத்தை சொல்லாமலே சென்று விட்டார். அவர் செய்தது மிக பெரிய தப்பு. அவருடைய ஆன்மாவை கூட மன்னிக்க மாட்டேன் என்று மௌனிகா கூறியுள்ளார்.