கேஜிஎஃப்2 , பொன்னியின் செல்வன் படத்துக்கு தேசிய விருது!! சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்..

Vikram Movie Ponniyin Selvan: I Gossip Today KGF Chapter 2 Gargi
By Edward Aug 16, 2024 10:30 AM GMT
Report

ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசு வழங்கி வருகிறது. அந்தவகையில் 2022 ஆம் ஆண்டிற்காகன 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் யார் யாருக்கு விருதுகள் சென்றுள்ளது என்றும் யாருக்கு கிடைக்காமல் போனது என்பதையும் பார்ப்போம்.

கேஜிஎஃப்2 , பொன்னியின் செல்வன் படத்துக்கு தேசிய விருது!! சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்.. | Movies Misses National Awards 2022 Vikram Gargi

தேசிய திரைப்பட விருதுகள் 2024 

சிறந்த தமிழ் படம் : பொன்னியின் செல்வன்.

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்) மற்றும் ப்ரீத்தம் என்பவருக்கும் பிரித்து வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவு : பொன்னியின் செல்வன்.

சிறந்த ஒலி வடிவமைப்பு : பொன்னியின் செல்வன்.

மீனா அம்மாவும் அப்படி நடித்தவர் தான்!! என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு..

மீனா அம்மாவும் அப்படி நடித்தவர் தான்!! என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு..

சிறந்த நடிகைக்கான விருது : திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனும், கட்ச் எக்ஸ்பிரஸ் படத்திற்காக மானசி பரேக்கும் பகிர்ந்து கொண்டனர். சிறந்த நடன இயக்குநர் : ஜானி (திருச்சிற்றம்பலம்).

கே.ஜி.எப் 2 சிறந்த கன்னட படத்திற்கான விருதை வென்றது. சிறந்த Stunt : அன்பறிவு ( கே.ஜி.எப் 2).

சிறந்த நடிகருக்கான விருது (கன்னடம்) : ரிஷப் ஷெட்டி (காந்தாரா).

கேஜிஎஃப்2 , பொன்னியின் செல்வன் படத்துக்கு தேசிய விருது!! சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்.. | Movies Misses National Awards 2022 Vikram Gargi

ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படத்தில் Stunt வேலை பார்த்த அன்பறிவுக்கு தேசிய விருது வழங்கவில்லை. கேஜிஎஃப் 2 படத்திற்கு மட்டும் அன்பறிவு வாங்கியிருக்கிறார்.

மேலும், கன்பார்ம் தேசிய விருது என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கார்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படாமல் இருந்தது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. விருதுக்காகவே படம் எடுக்கும் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்திற்கு கூட விருது கிடைக்கவில்லை.

ஒருபுறம் தமிழில் 6 தேசிய விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் தரமான படத்திற்கு தேசிய விருது கிடைக்காமல் போனதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்து தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.