எம் ஆர் ராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டது உண்மையா!! நடிகர் ராதா ரவி வெளிப்படையாக கூறிய காரணம் இதுதான்...
60-களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர்கள் எம் ஜி ஆர், எம் ஆர் ராதா. இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அப்படி ஒருமுறை இருவரும் பேசிக்கொண்டிருந்த போது எம் ஆர் ராதா, எம் ஜி ஆர்-ஐ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
இருவரின் உயிருக்கு எதுவும் ஆகாமல் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் விசாரணைக்கு பின் எம் ஆர் ராதாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு அதன்பின் குற்றம் குறைக்கபட்டு எம் ஆர் ராதா 3 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ராதா ரவி பல விசயங்களை கூறியிருக்கிறார்.
என்னுடைய அப்பா புரட்சி தலைவரின் நெருங்கி நண்பர். வாசு என்ற தயாரிப்பாளர் என் அப்பாவிடம் 1 லட்சம் பணமும் எம் ஜி ஆரின் கால்ஷீட்டையும் கேட்டு பெற்றுக்கொண்டார். பெற்றால் தான் பிள்ளை படம் எங்க அப்பாவுக்கு 100வது படம். ஆலந்தூர் சேட்டிடன் எங்களுடைய தோட்ட பத்திரத்தை வைத்து 1 லட்சம் ரூபாய் கொடுத்தார். அதன்பின் அந்த பணத்தை வாசு தானே தரவேண்டும், அப்போது எம் ஜி ஆர், நான் தருகிறேன் என்று கூறினார்.
1967ல் என் அப்பா எம் ஜி ஆரை சுட்டுவிட்டு ரத்தக்கரையுடன் போலிஸ் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் அப்போதைய ஆட்சி மாறியதால் என் அப்பா கொடுத்த புகார் மறைக்கப்பட்டது. என் அப்பா நான் தான் சுட்டேன்னு சொன்னார்.
ஒரு ஷாட் மண்டையை தெரித்துக்கொண்டது, இன்னொரு ஷாட் கழுத்தில் எப்படி வந்தது. அதன்பின், 7 வருடம் என்பது 3 வருஷமாகி வெளியில் வந்தார். அப்போது கலைஞர் முதலமைச்சராக இருந்ததால் என் அப்பா வெளியில் வந்தார்.
இல்லை என்றால் உள்ளையே முடித்திருப்பார்கள் என்று ராதா ரவி தெரிவித்துள்ளார். இனிமேல் யாராக இருந்தாலும், எம் ஆர் ராதா எம்ஜிஆரை ஏன் சுட்டார் என்று எழுதாதீர்கள் என்று கூறியுள்ளார்.