ஆள விடுங்கடா, காதல் என்றால் பயம்.. தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்ட மிருணாள் சொன்ன ரகசியம்
மிருணாள் தாகூர்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.
ரகசியம்
இவர் நடிகர் தனுஷ் உடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், மிருணாள் காதல் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " காதல் தோல்வியை சந்தித்தாலும், அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று ஏற்று கொண்டேன். காதலில் எனக்கு இருக்கும் பெரிய பயம் துரோகம் செய்யப்படுவேனோ என்பதுதான்.
என்னிடம் முன்பு இருந்த அதே அன்பு இப்போது இல்லை என்று என் துணை சொன்னால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் துரோகம் செய்தால் என்னால் ஏற்று கொள்ள முடியாது.
அந்த பயம் எனக்கு இப்போதும் உண்டு. உண்மையான காதல்தான் எனக்கு முக்கியம், பள்ளி, கல்லூரி கால நண்பர்களுடன் இன்னும் தொடர்பில் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.