என்ன சீதா இதெல்லாம்!! பலான காட்சிக்கு பிறகு வாய்ப்பிற்காக கோடியில் சம்பளத்தை கேட்கும் நடிகை
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை மிருணாள் தாகுர். பான் இந்திய படமாக வெளியான இப்படத்தின் மூலம் பிரபலமான மிருணாள் அப்படத்திற்காக 2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
அப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்த மிருணாள் தாகும் சமீபத்தில் ஆந்தாலஜி தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வில் நடித்திருந்தார்.
திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளும் பெண் ரோலில் மிருணாள் தாகூர் பலான படுக்கையறை காட்சியில் நடித்து முகம் சுளிக்கவும் வைத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் 80 லட்சத்தில் சம்பளம் வாங்கி, அதன்பின் ஒரு படத்திற்கு 2 கோடி சம்பளமாகவும் உயர்த்தி வாங்கி வந்தார்.
தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்திற்கு பின் அவரது சம்பளத்தை 3 மடங்கு அதிகமாக உயர்த்தி கேட்டு வருகிறாராம்.
நானி மற்றும் விஜய் தேவரகொண்டா படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் விஜய் தேவரகொண்டா படத்திற்காக 3.2 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது.