19 வயதில் முட்டாள்தனமான விஷயத்தை செய்தேன்!! நடிகை மிருணாள் தாகூர் புலம்பல்..
மிருணாள் தாகூர்
நடிகர் தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூரை காதலித்து வருவதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் உலா வரும் நிலையில், பல வருடங்களுக்கு முன்பு முருணாள் அளித்த பேட்டி வீடியோ ஒன்று, தற்போது வைரல் ஆனது.
அதில் அவர் நடிகை பிபாஷா பாசு ஆண் போல இருக்கிறார் என பாடி ஷேமிங் செய்வது போல பேசி இருக்கிறார். அதற்கு பிபாஷாவும் கோபமாக இன்ஸ்டாவில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
19 வயதில்
இதனை அறிந்த மிருணாள் தாகூர், அதற்கான விளக்கத்தை பகிர்ந்துள்ளார். 19 வயதில் டீனேஜ் பெண்ணாக சில முட்டாள்தனமான விஷயங்களை பேசி இருக்கிறேன்.
நான் பேசிய வார்த்தைகள் எந்தளவுக்கு காயப்படுத்தும் என்பதை நான் அப்போது புரிந்திருக்கவில்லை. அதற்காக நான் ஆழமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
யாரையும் பாடி ஷேமிங் செய்ய வேண்டும் என்பது என் எண்ணமில்லை. விளையாட்டாக அந்த பெட்டியில் பேசியது இந்த அளவுக்கு சென்று இருக்கிறது. நான் என் வார்த்தைகளை வேறு விதமாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.
அழகு எல்லா விதமாக இருக்கும், கால்போகும் நான் இதை புரிந்துக்கொண்டிருருக்கிறேன் என்று மிருணாள் தாகூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
