கோடியில் சம்பளம்!! கஞ்சமாக வாழ்க்கையை நடத்தும் நடிகை மிருணாள் தாகூர்..
மிருணாள் தாகூர்
தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே சீதா ராமன் படத்தின் மூலம் மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர். தற்போது பால்வுட் படங்களிலும் நடித்து பிஸியாகவிட்டார்.
கஞ்சமாக வாழ்க்கை
இந்நிலையில் மிருணாள் தாகூர் பற்றிய ஒரு செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் ஸ்டைலாகவும் அழகாகவும் இருக்கும் மிருணாள், தனது அன்றாட வாழ்க்கையிலும் ஆடம்பரமாகவே வாழ்வதை போல் காட்சியளிக்கிறார்.
குறிப்பாக விலையுயர்ந்த ஆடை அணிகலன் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஆனால், தனக்கு விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவதில் விருப்பம் இல்லை என்றும் எத்தனை விலை கொடுத்து ஆடைகள் வாங்கினாலும் அவை பெரும்பாலும் அலமாரியில் முடங்கி கிடைக்கும்.
தான் வாங்கியதில் அதிக விலைக்கொண்ட ஆடை வெறும் ரூ. 2 ஆயிரம் தான் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். கோடிகளில் சம்பளம் வாங்கும் மிருணாள் திரைப்பட விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் மிருணாள் லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருகிறார்.
அது அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டவை. ஆடைகளை வாங்க விருப்பமில்லை என்றும் உணவு மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்யவே விரும்புவதாக கூறியுள்ளார் மிருணாள் தாகூர்.