ராஷ்மிகாவுக்கு பதிலாக இவரா..? சிறப்பு பாடலுக்காக கமிட் செய்யப்பட்ட நடிகை

Rashmika Mandanna Mrunal Thakur
By Kathick Feb 02, 2026 11:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் நடிப்பில் தற்போது பெத்தி படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை இயக்குநர் புஜ்ஜி பாபு இயக்க ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட ராஷ்மிகா மந்தனாவை படக்குழு அணுகியுள்ளனர். ஆனால், அது நடக்கவில்லை.

ராஷ்மிகாவுக்கு பதிலாக இவரா..? சிறப்பு பாடலுக்காக கமிட் செய்யப்பட்ட நடிகை | Mrunal Thakur Replaced Rashmika In Peddi Movie

இந்நிலையில், தற்போது அந்த சிறப்பு பாடலில் நடனமாட மிருணாள் தாகூர் சரியென கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகாவுக்கு பதிலாக மிருணாள் கமிட்டாகியுள்ள நிலையில், அந்த பாடல் எப்படி வரப்போகிறது என்பதை காண ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும், சிறப்பு பாடலுக்கு மிருணாள் தாகூர் நடனமாடுவது இதுவே முதல் முறையாகும்.