முகேஷ் அம்பானியின் ரூ. 15 ஆயிரம் கோடி ஆண்ட்லியா வீடு இருக்கட்டும்!! பரம்பரை வீட்டின் வரலாறு தெரியுமா?
முகேஷ் அம்பானி
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், அவரது குடும்பத்தினருடன் 27 மாடி கொண்ட ஆண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்.
ஆண்ட்லியா வீடு
ஆண்டிலியா வீட்டை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த வீட்டில் பல ஆடம்பர வசதிகள் இருக்கிறது. அந்த வீட்டில் சுமார் 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்காக நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் ரொட்டிகள் தயாரிக்கப்படுவதாக புது தகவல் வெளியாகியது.
இந்நிலையில், குஜராத்தில் உள்ள அம்பானியின் பரம்பரை வீட்டை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாளிகையானது ஜூனகத் மாவட்டத்தில் உள்ள சோர்வாட் கிராமத்தில் அமைந்துள்ளது. உள்ளூரில் 'மங்கரோல்வலனோ டெலோ' என்று அழைக்கப்படுகிறது. அம்பானியின் அந்த வீடு 1.2 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு அதன் மதிப்பு தற்போதையை நிலவரப்படி ரூ. 100 கோடியாம்.
பரம்பரை வீட்டின் வரலாறு
இரண்டு மாடி வீட்டின் மையத்தில் ஒரு முற்றம், வெவ்வேறு அறைகள், ஒரு வராண்டா மற்றும் சமீபத்தில் மறுவடிவமைப்பு நடந்தபோதிலும் குஜராத்தில் கட்டிடக்கலை பராமரிக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிராசந்த் கோர்தன்பாய் அம்பானி (முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தந்தைவழி தாத்தா) வீட்டின் ஒரு பகுதியை உள்ளூர் வீட்டு உரிமையாளரிடமிருந்து வாடகைக்கு எடுத்து, அவர் மனைவி ஜம்னாபென் மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
ஆறு பேர்களில் 1932 இல் பிறந்த முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானியும் ஒருவர். 2002 ஆம் ஆண்டு திருபாய் அம்பானி இறந்தபோது, அம்பானி குடும்பத்தினர் அந்த வீட்டை வாங்கி அதை ஒரு நினைவிடமாக மாற்ற முடிவு செய்தனர். 2011 இல் திருபாய் அம்பானி நினைவு இல்லம் என்று திறக்கப்பட்டது. அந்த வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு தனித்தனியான நுழைவாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பகுதி பொதுவாகவும் மற்றொன்று தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான பிரிவில், ஒரு சிறு நகரத்தின் சிறுவன் இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராக திருபாயின் எழுச்சியூட்டும் பயணத்தை விவரிக்கும் புகைப்படங்கள், ஆவணங்கள், விருதுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம்.
குடும்ப உறுப்பினர்களுக்கான பிரிவில், குடும்ப அறைகள், பிராத்தனை அறை, ஒரு தியான இடம், ஒரு நூலகம், கூட்டம் நடத்துவதற்கான ஒரு அறையும் அங்கு அமைந்துள்ளது. பொதுமக்களுக்காக பிரிவில், பொதுமக்கள் பார்வையிட ரூ. 2 கட்டணத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறதாம்.


