15 ஆயிரம் கோடி ரூபாய் அம்பானியின் ஆண்டிலியா வீடு!! ஒரு மாச மின் கட்டண இவ்வளவா?
முகேஷ் அம்பானி - Antilia
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், அவரது குடும்பத்தினருடன் 27 மாடி கொண்ட ஆண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்.
ஆண்டிலியா வீட்டை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த வீட்டில் பல ஆடம்பர வசதிகள் இருக்கிறது.
மும்பையின் மிக உயரமான கட்டிடமாக ஆண்டிலியா வீடு இருந்து வந்தது. ஆனால் அதை மிஞ்சும் அளவில் ஆண்டிலியா வீடு பக்கதிலேயே இருக்கும் லோதா அல்டாமெளண்ட் கோபுரம் தான் உயரமான கட்டிடம் என்ற பெருமை பெற்றுள்ளது.
ஒரு மாச மின் கட்டணம்
இது ஒரு பக்கம் இருக்க, 27 மாடிகள் கொண்ட ஆண்டிலியா வீட்டின் முதல் மாதம் மின் கட்டணம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது. ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பில் 2006ல் கட்டிடத்தின் கட்டுமான வேலைகள் ஆரம்பித்து 2010ல் நிறைவடைந்து அம்பானி குடும்பம் ஆண்டிலியா வீட்டுக்கு குடிபெயர்ந்தனர்.
பல ஆடம்பர வசதிகள் காரணமாக கணிசமான அளவு மின்சாரம் தேவைப்படும். அப்படி ஆண்டிலியாவில் ஒரே மாதத்தில் 6,37,240 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக ரூ. 70,69,488 மின் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாம்.