9 லட்சம் கோடி சொத்து!! அமெரிக்காவில் இத்தனை கோடியில் வீடு வாங்கிய முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
உலகின் டாப் பணக்காரர்களின் 18வது இடத்திலும் ஆசியாவிலேயே டாப் 1 பணக்காரருமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி, பிரமாண்டத்திற்கு பேர் போனவர்.
தான் வாங்கும் கார் முதல் திருமண நிகழ்ச்சிகள் வரை பல கோடிகளில் செலவு செய்து பிரமிக்க வைப்பவர். அப்படி அவரின் மும்பை ஆண்ட்லியா பங்களா ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள வீடாக பார்க்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா வீடு
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதியில் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் இடமாக இருக்கிறது. அங்குள்ள ஹூபர்ட் சாலையில் முகேஷ் அம்பானி ரூ. 153.59 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கியுள்ளார். இது 17 ஆயிரம் சதுர அடிக்கொண்ட சொகுசு வீடாக இருக்கிறது.
இந்த வீட்டில் கூடைப்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக நியூயார் நகரில் ஒரு ஓட்டலும், மாண்டரின் ஒரியண்டல் என்ற பெயருடைய அந்த ஓட்டலை 2022ல் ரூ. 866 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.
அவருக்கு சொந்தமான நியூயார்க் நகரில் ஒரு வீடு இருந்தது, அந்த வீட்டை கடந்த 2023ல் விற்பனை செய்துள்ளார் முகேஷ் அம்பானி.