835 கோடி சொத்து!! முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானியின் வைர மாளிகை!!
முகேஷ் அம்பானி
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்க கூடியவர் தான் முகேஷ் அம்பானி. ரூ. 9280 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி, தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடிப்பார். அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது.
இஷா அம்பானி
இந்நிலையில் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு கடந்த 2018ல் ஆனந்த் பிரமால் என்பவரை திருமணம் நடந்து முடிந்தது. ஆடியா, கிருஷ்ணா என்ற இரட்டையர் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், திருமணத்திற்குப்பின் ஆனந்த் பிரமாலின் பெற்றோரான ஸ்வாதி - அஜய் பிரமால் தன் மகன் மற்றும் மருகள் இஷாவிற்கு 'Gulita' என்ற மாளிகை போன்ற வீட்டை பரிசாக அளித்தனர். மும்பை வொர்லியில் இருக்கும் இந்த 50 ஆயிரம் சதுர அடி கொண்ட பங்களாவை Eckersley O’Callaghan என்ற லண்டன் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
குலிதா மாளிகை
இந்த வைரக் கருப்பொருள் கொண்ட பங்களாவில், சிறப்பான விளக்குகள், 3 ஆடம்பரமான அடித்தளங்கள், அரண்மனை மாதிரியான ஹால்கள், வசதியான தங்கும் அறைகள், அதிக சுற்றளவன படிப்பு அறைகள், சொகுசான லவுஞ்ச் பகுதிகள், ஆடை அறைகள், உட்புற நீச்சல் குளம் என பல வசதிகள் இருக்கிறதாம்.
இந்த குலிதா மாளிகை வீட்டின் ஆரம்பகட்ட மதிப்பு சுமார் ரூ. 452 கோடி என இருந்தாலும் அதன் மேம்பாட்டு வேலைக்களுக்காக மட்டுமே சுமார் ரூ. 500 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாம்.
இஷா - ஆனந்த் இருவரும் கலை ஆர்வலர்களாக இருப்பதால் இந்த வீட்டின் ஒவ்வொரு பாகமும் அற்புத ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாம். 2012ல் ரூ. 500 கோடிக்கு வாங்கப்பட்ட குலிதா மாளிகை தற்போது ரூ. 1100 கோடி மதிப்பில் இருக்கிறது.
