முகேஷ் அம்பானியின் ரூ. 15 ஆயிரம் கோடி ஆண்டிலியா வீடு.. ஏற்பட்ட சிக்கல்..
முகேஷ் அம்பானி ஆண்டிலியா
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்க கூடியவர் தான் முகேஷ் அம்பானி. ரூ. 9280 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி, தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடிப்பார். அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட ஆண்டிலியா வீட்டின் மாத கரண்ட் பில் 70 லட்சம் ரூபாய் என்ற தகவலும் பரவியது. உலகத்தரம் வாய்ந்த பல வசதிகள் கொண்ட இந்த மாளிகையில் தனி உலகம் என்று சொல்லலாம்.
வக்பு திருத்தச் சட்டம்
இந்நிலையில் அம்பானியின் ஆண்டிலியா வீட்டுக்கு ஆபத்து என்ற தகவல் வெளியாகியுள்ளது. வக்பு திருத்தச் சட்டத்தால், மும்பையில் முகேஷ் அம்பானியின் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆண்டிலியா வீடுக்கு சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
அதாவது வக்ப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறப்பட்டிருக்கும் சூழலில், வக்பு வாரியத்திடமிருந்து நிலத்தில் கட்டியுள்ளார் முகேஷ் அம்பானி. நிலத்தின் முந்தைய உரிமையாளரான கரீம் பாய் இப்ராஹிம், மதக்கல்வி மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்காக வக்பு வாரியத்திற்கு நிலத்தை வழங்கியுள்ளார்.
ஆனால் இந்த இடம் விற்பனையில் அப்படி இல்லை, ஏனென்றால் அந்த நிலம் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நீண்டகாலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே வக்பு சட்டம் அமலாகியுள்ளதால் இது அம்பானிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு அம்பானி குடும்பத்திற்கு எதிராக வழங்கினால் அவர்கள் வீட்டை காலி செய்ய வேண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.