விஜய் - ராஷ்மிகா திருமணம்!! நம்பர் 1 பணக்காரர்களும் வராங்களாம்!! லிஸ்ட் இதோ..
விஜய் - ராஷ்மிகா திருமணம்
நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டவை காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனையில் இவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ராஷ்மிகா - விஜய் திருமணத்திற்கு பிரபலங்கள் மற்றும் மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லாமல் எளிமையான முறையில் நடக்கவுள்ளதாம்.
பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே திட்டமிட்டுள்ள இந்த ஜோடி திருமணத்திற்கு பின் 2 மாதங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கவும் முடிவெடுத்துள்ளார்களாம்.
பல பிரபலங்கள்
மேலும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் ரிசப்ஷனில் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி தன்னுடைய குடும்பத்தினரும் விஜய் - ராஷ்மிகா திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ளார்களாம்.
அதேபோல் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதற்கொண்டு ஏகப்பட்ட தெலுங்கு திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.