மும்தாஜ் உடம்பில் இப்படியொரு பிரச்சனை இருக்க!! அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்

Mumtaz Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 06, 2024 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சி நடனத்தின் மூலம் பிரபலமானவர் மும்தாஜ். பல படங்களில் நடித்திருந்த மும்தாஜ், பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இதைதொடர்ந்து கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் போட்ட சண்டைகள் ஒவ்வொன்றும் வைரல் ஆனது.

மும்தாஜ் உடம்பில் இப்படியொரு பிரச்சனை இருக்க!! அவரே சொன்ன ஷாக்கிங் தகவல் | Mumtaj Speak About Her Health Issue

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மும்தாஜ், உடம்பை அசைக்க முடியாத அளவுக்கு பிரச்சனை இருக்கிறது. பல மருத்துவர்களிடம் அணுகினேன். ஆனால் என்ன பிரச்சனை என கண்டறிய முடியவில்லை. அப்போது ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் எனக்கு ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருக்கிறது என்று தெரியவந்தது.

வெளியில் என்னை பார்க்க நன்றாக இருப்பது போல் தெரியும் ஆனால் உள்ளே உள்ள வலி எனக்கு தான் தெரியும். இந்த பிரச்சனையால் எனக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது. ஒருமுறை 2 மணி நேரம் அழுதேன் அதற்கான காரணம் இன்றுவரை எனக்கு தெரியவில்லை.

மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர காரணமாக இருந்தது என்னுடைய அண்ணன், குடும்பம் மற்றும் அல்லா தான். இல்லை என்றால் தற்கொலை செய்திருப்பேன் என்று மும்தாஜ் கூறியுள்ளார்.