இறந்த பிறகு கிடைத்த டைரியில் இருந்த ரகசியம்! முரளி மனைவி நடிகை ஷோபா செய்த செயல்

murali adharva shobha thirupur subramaniam
By Edward Aug 02, 2021 06:20 AM GMT
Report
712 Shares

80, 90களில் முன்னணி நடிகராகவும் மோகன், விஜயகாந்த், கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு இணையாக நடித்து வந்தவர் நடிகர் முரளி. 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக முரளி உயிரிழந்தார்.

இறந்த முரளிக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்துள்ளது. அவர் உயிரிழந்த பின்பு, அவருடைய டைரி மூலம் தன் கணவர் வைத்திருந்த கடனைத் தெரிந்து கொண்டுள்ளார் ஷோபா. அதில் பைனான்சியர் திருப்பூர் சுப்ரமணியத்துக்கு 17 லட்ச ரூபாய் கடன் கொடுக்க வேண்டும் என இருந்துள்ளது. ஆனால் திருப்பூர் சுப்ரமணியமோ மனிதாபிமானத்துடன் முரளி இறந்தவுடன், தன்னிடம் இருந்த பத்திரங்கள் அனைத்தையும் கிழித்துப் போட்டுவிட்டார்.

அதன்பின் சில நாட்கள் கழித்து, திருப்பூர் சுப்ரமணியத்திடம் தொலைபேசியில் பேசிய ஷோபா, அவரை வீட்டுக்கு அழைத்து 17 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். அதனை வாங்க மறுப்பு தெரிவித்த திருப்பூர் சுப்பிரமணியனிடம் இது என் கணவர் பணம் தான், அவர் சம்பாத்தியத்தில் வாங்கிய இடத்தை விற்று தான் இந்த பணத்தை உங்களுக்கு திரும்ப செலுத்துகிறேன். மேலும் தன் கணவர் யாருக்கும் கடனாளியாகச் சென்று விடக்கூடாது என்று இதை செய்துள்ளார் என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.