அவங்களுக்காக அனிருத் செய்த மிகப்பெரிய விசயங்கள்.. எல்லாம் அதுக்கு தான்
கோலிவுட் சினிமாவை தாண்டி தற்போது தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக திகழ்ந்து மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளவர் அனிருத் ரவிச்சந்திரன். 3 படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-ஆல் அறிமுகப்படுத்திய நாள் முதல் இன்றுவரை பல கோடி சம்பளத்திற்கு அதிலும் டாப் இயக்குனர்களின் படங்கள் அனைத்திலும் இவர் தான் வரிசைக்கட்டி இசையமைத்து வருகிறார்.
ஜெயிலர், ஜவான், லியோ, இந்தியன் 2, விடாமுயற்சி, தலைவர் 170 உட்பட பல முன்னணி நடிகர், இயக்குனர்கள் படங்களுக்கு இசையமைத்தும் கமிட்டாகியும் வருகிறார். இதற்கு முக்கிய காரணம் நட்பு தானாம். இவர் இசை தான் வேண்டும் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் கூட அவரை தான் சிபாரிசு செய்கிறார்கள். ஒரு படம் வெற்றியாவதற்கு அனிருத் இசையும் முக்கிய பங்காற்றுகிறது.
டாக்டர், பீஸ்ட், விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் இயக்குனர்கள் அனிருத்க்கு நெருங்கிய நண்பர்கள். அப்படி நட்புக்காக பணத்தை முக்கியமாக கருதாமல் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார் அனிருத்.
திரைத்துறையில் அனிருத்துக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். பெரிய இயக்குனர்கள் முதல் சிறிய இயக்குனர்கள் வரை அவர் இசை அல்லது குரலில் தங்கள் படம் வெளியாக வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
அதனால் தான் அனிருத் நட்புக்கு மதிப்பு அளித்து சம்பளம் கூட வாங்காமல் பாடி கொடுத்தும் வருகிறார். நெல்சன் லைக்காவிடம் கதை கூற அனிருத் ஒரு காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள விசயத்தில் கறாராக இல்லாமல் நட்புக்கு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறார். பலருக்கும் தெரியாமல் அனிருத் தன் நண்பர்களுகாக பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.