விவாகரத்துக்கு பின் சைந்தவிக்கு வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர்!! புகைப்படம்..
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பாடகிகளில் ஒருவர் சைந்தவி. 2004ல் ஷங்கர் இயக்கத்தில் உருவான அந்நியன் படத்தில் அண்டங்காக்கா கொண்டைக்காரி என்ற பாடலை பாடி திரையுலகில் காலெடி எடுத்து வைத்தார்.
அதன்பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வந்த சைந்தவி ஜிவி பிரகாஷ் குமார் இசையில் பாடியபோது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்து வாழப்போவதாக கூறி அறிக்கை வெளியிட்டது தமிழ் திரையுலகையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் ஜூ தமிழ் தொலைக்காட்சியில் சரி கம பா சீனியர் 4 சீசனில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கும் பேபி அண்ட் பேபி படத்தில் ஒரு பாடலை பாட்டியிருக்கிறார் பாடகி சைந்தவி.
படத்தின் பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அப்பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கணவரை பிரிந்த மே 13க்கும் மேல் முதல் வாய்ப்பாக டி இமான், சைந்தவிக்கு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.