18 வயதில் இருமுறை தற்கொலை முயற்சி!! காப்பாறியவர் பெயரை வைத்துக் கொண்ட இசையமைப்பாளர்...

Gossip Today Cinema Update Cinema News
By Edward Feb 24, 2026 05:15 AM GMT
Report

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

கன்னட சினிமாவில் பிரஷாந்த் நீல் இயக்கிய உக்ரம் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் தான் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். கேஜிஎஃப் படத்தின் இரு பாகங்களுக்கு இசையமைத்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தற்போது கல்ட் என்ற தெலுங்கு படத்தில் இசையமைத்துள்ள ரவி பஸ்ரூர், அப்படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

18 வயதில் இருமுறை தற்கொலை முயற்சி!! காப்பாறியவர் பெயரை வைத்துக் கொண்ட இசையமைப்பாளர்... | Music Director Ravi Basrur Tried To End His Life

இருமுறை தற்கொலை முயற்சி

அதில், எனக்கு 18 வயது இருக்கும்போது இருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன். எனக்கு வாழ பிடிக்காமல் இருந்தது. ஆனால் இரண்டு முறையும் நான் காப்பாற்றப்பட்டேன். இரண்டாவது முறை என்னை காப்பாற்றியவர் என் இசையை கேட்டு ஒரு கீபோர்ட் வாங்கிக் கொடுத்தார்.

மேலும் ரூ. 35 ஆயிரம் கொடுத்தார். அன்று தான் என் பெயரை ரவி என்று மாற்றிக்கொண்டேன். என்னை காப்பாற்றி உதவி செய்தவரின் பெயர் தான் ரவி என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் ரவி பஸ்ரூர்.