யுவன் ஷங்கர் ராஜாவின் மொத்த சொத்து மதிப்பு!! எவ்வளவு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன். இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம் வாங்க.
யுவன் ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், விஜய்யின் கோட் படத்திற்காக இவர் ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

யுவனுக்கு சென்னையில் சொந்தமாக பிரம்மாண்ட பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களா வீட்டின் மதிப்பு ரூ. 10 கோடி என கூறுகின்றனர். அந்த பங்களாவின் கட்டிடத்திற்கு மட்டுமே ரூ. 10 கோடி செலவு செய்துள்ளாராம். அந்த இடத்தின் மதிப்பு இன்னும் பல கோடி இருக்கும் என்கின்றனர்.
சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு ரூ. 125 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை, சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.