மைனாவுக்கு மட்டும் அள்ளி கொடுக்கும் விஜய் டிவி.. ஒரு நாள் சம்பளம் இத்தனை லட்சமா?
Bigg Boss
Myna Nandhini
By Parthiban.A
பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார் மைனா நந்தினி. அவர் ஒரு வாரம் தாமதமாக தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். அவர் விஜய் டிவி ப்ராடக்ட் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவர் கன்டென்ட் கொடுக்கவில்லை. அதனால் நெட்டிசன்கள் அவரை அதிகம் ட்ரோல் தான் செய்து வருகின்றனர்.

ஒரு நாள் சம்பளம்
பிக் பாஸ் வருவதற்கு மைனா நந்தினி வாங்கும் சம்பளம் பற்றிய விவரத்தை அவருடன் நெருக்கமாக இருக்கும் மணிகண்டன் தெரிவித்து இருக்கிறார்.
"மைனாவுக்கு ஒரு நாளுக்கு ஒன்றரை லட்சம் சம்பளம்தருகிறார்கள், ஆனால் அவர் அந்த அளவுக்கு எதுவுமே வீட்டில் செய்யவில்லை" என மணிகண்டன் கூறி இருக்கிறார்.
மைனாவுக்கு மட்டும் விஜய் டிவி அள்ளி கொடுக்கிறதே என பிக் பாஸ் ஷோ ரசிகர்களும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
