நான் பெண்ணாக இருந்தால் மம்மூட்டி உடன் அது நடந்திருக்கும்.. மோசமாக பேசிய மிஷ்கின்!!

Actors Mysskin Tamil Actors
By Dhiviyarajan Jun 21, 2024 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உண்டாக்கி கொண்டுள்ளவர் இயக்குனர் மிஷ்கின்.

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் என சிறப்பான படங்களை இயக்கியுள்ளார்.

அதே நேரத்தில் நடிகனாக நந்தலாலா படத்தில் ரசிகர்களை கவர்ந்தவர், அதனை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் தன்னை நல்ல கலைஞனாக நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.

மறுபுறத்தில் மிஷ்கின் தனது கருத்துகளுக்கும் சலசலப்புகளை கொண்டுவருகிறார். துப்பறிவாளன் விவகாரத்தில் விஷாலை அவர் திட்டியது பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அப்படி தான் மற்றுமொரு சம்பவம் மீண்டும் வைரலாகிறது. ராம் இயக்கிய பேரன்பு படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பட நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் அவரை கற்பழித்திருப்பேன் என்று மிஷ்கின் பேசியிருப்பார்.   

நான் பெண்ணாக இருந்தால் மம்மூட்டி உடன் அது நடந்திருக்கும்.. மோசமாக பேசிய மிஷ்கின்!! | Mysskin Controversy Speech