குட்டிச்சுவரா போன இயக்குனர்... மேடையில் இயக்குனரை படுகேவலமாக பேசிய மிஷ்கின்..

Gossip Today Mysskin
By Edward Nov 15, 2022 10:21 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். பிசாசு 2 படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் மிஷ்கின் சினிமா பட சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சர்ச்சையான பேச்சுக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அப்படி விஷால் ஆரம்பித்து பல இயக்குனர் நடிகர்களை பற்றி மேடையில் நாகரீகம் இல்லாமல் படுமோசமாக நடந்து வருகிறார். அந்தவகையில் விஜய் ஆண்டனி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் படம் நான் பார்த்ததே இல்லை என்று பேசியது வைரலானது.

இதனை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் கழகத்தலைவன் படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

அப்படி பேசுகையில் மகிழ் திருமேனியின் படங்களை நான் பார்த்தில்லை என்று அவமானப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். அவரை அடுத்து பேசிய மகிழ்த்திருமேனி, மிஷ்கின் சாரின் படத்தை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலடி கொடுக்கும் படி பேசியுள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் ராஜேஷை மேடையில் குட்டிச்சுவரா போன டைரெக்டர் என்று படுமோசமான வார்த்தியில் அவமானப்படுத்தியுள்ளார். இதனை தாங்க முடியாத இயக்குனர் ராஜேஷ், இயக்குனர் சங்க உறுப்பினர்கள் சங்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டி புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து மிஷ்கினை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குனர்கள் குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் சினிமா பிரபலங்களை அவமானப்படுத்தி மிஷ்கின் பேசுவது சரியானதில்லை என்று சினிமா பிரபலங்களும் விமர்சகர்களும் கண்டித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.