1500 ரூபா கொடுப்பாங்கனு வந்தேன்! சினிமாவால் மனைவியும் விவாகரத்து செஞ்சிட்டு போய்ட்டா? மிஸ்கின்

Mysskin
By Edward Jun 12, 2022 07:55 AM GMT
Report

சினிமாவில் பல எப்படியாவது நுழைந்து நல்ல பேர் எடுத்து செட்டிலாகிவிடலாம் என்று தான் வருவார்கள். அதிலும் இயக்குனராவது என்பது சாதாரண விசயம் கிடையாது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி யாரிடமாவது உதவி இயக்குனராகி ஒரு நல்ல படத்தினை கொடுக்க வேண்டும் என்ற கனவு தான் இயக்குனருடையது. அப்படி இயக்குனர் வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் மிஸ்கின்.

1500 ரூபா கொடுப்பாங்கனு வந்தேன்! சினிமாவால் மனைவியும் விவாகரத்து செஞ்சிட்டு போய்ட்டா? மிஸ்கின் | Mysskin Open Up Her Personal Life Stuggles

இயக்குனர் அவதாராம்

உதவி இயக்குனராக இருந்த பின் சித்திரம் பேசுதடி என்ற படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார். அப்படத்திற்கு பிறகு அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்களை கொடுத்தார். அவர் இயக்கிய அனைத்து படங்களும் சினிமாவை ரசிக்கும் படியாகவும் திரில்லர், பேய், சைக்கோ படங்கள் இப்படியாகத்தான் இருக்கும் என்பதை காட்டியவர்.

இயக்கம் தாண்டிய நடிப்பு

இயக்குவது மட்டுமில்லாமல் ஒருசில படங்களில் நடிக்கவும் செய்திருப்பார் மிஸ்கின். சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார். கூடி சீக்கிரமே இப்படம் தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.

சினிமா வாழ்க்கை - கல்யாண வாழ்க்கை

சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே பல பேட்டிகளை அளித்திருந்த மிஸ்கின் சமீபத்தில் தன் மனைவி எதற்கு என்னை விட்டு சென்றால் என்ற காரணமே தெரியாது.

குழந்தை இருந்தும் சினிமா சினிமா என்று அதிலேயே வாழ்க்கையை நகர்த்திவிட்டேன். எனக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் என் மனைவியை விவாகரத்து செய்யாமல் அவருடன் வாழ்ந்திருப்பேன்.

அதுதான் காரணம் என்று பின்பு தான் தெரிந்தது என்றும் கூறியிருந்தார். தற்போது என் மகள் கனடாவில் இருக்கிறாள். அவள் என்னிடம் அப்பா கடைசி காலங்களில் என்னுடன் கனடாவுல வந்து இருங்க என்று கூறுகிறாள் எனவும் தெரிவித்துள்ளார்.

சினிமா அறிமுகம்

சினிமாவிற்கு நான் வந்தது ஒரு விபத்து. வெளியில் 1200 ரூபாய் சம்பளமாக பெற்றபோது சினிமாவில் ஷூட்டிங்கிற்கு போனால் 1500 கிடைக்கும் என்று தான் வந்தேன். சினிமாவில் இருக்கும் கஷ்டம் மற்ற துறைகளில் கிடையாது. வேலை முடிந்தது வீட்டுக்கு வந்ததும் அதை பற்றி மறந்துவிடுவோம்.

ஆனால் சினிமாவில் அப்படி இருக்க முடியாது. நான் சினிமாவிற்கு வருவதற்கு முன் 71 தொழில்களை செய்திருக்கிறேன் என்றும் மணிரத்னம் மாதிரி ஆகவேண்டும் என்றெல்லாம் யோசிப்பதில்லை என்று கூறியிருக்கிறார் மிஸ்கின்.