பிரபல பாடகர் பாடும் பப்பில் பீர் பாட்டிலை தூக்கி எறிந்த மர்ம நபர்கள்! ஷாக்காகும் வீடியோ காட்சி..

people singer beer
By Jon Mar 09, 2021 05:45 PM GMT
Report

இந்திய சினிமாவில் நடிகர் நடிகைகளை தாண்டி கொண்டாடப்படும் பிரபலங்களாக கருதப்படுபவர்கள் பாடகர்கள். அந்தவகையில் பாலிவுட் சினிமாவில் இருந்து தென்னிந்திய சினிமாவில் பாடல்கள் பாடி பிரபலமானவர் பாடகர் சித் ஸ்ரீராம். ஏ.ஆர். ரகுமான் அவர்களால் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான சித் ஸ்ரீராம் தமிழில் பல பாடல்கள் பாடி அசத்தியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக ரசிகர்கள் முன்னிலையில் பாடியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை நோக்கி தண்ணீர் பாட்டில்களையும், மதுபான பாட்டில்களையும் மேடையில் எறிந்துள்ளனர். இதனால் கோபத்தில் பாடகர் சித் ஸ்ரீராம், கெட் அவுட் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து அந்த மர்ம நபர்களால் பல சலசலப்புகள் ஏற்பட்டது.

அதை பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சியை முடித்து கொடுத்துள்ளார் சித் ஸ்ரீராம். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.