இதுதான் கடைசிநாள்! வெளியான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மகாலட்சுமி வீடியோ!.

serial naamiruvarnakkuiruvar Monisha
By Edward Nov 08, 2021 08:20 AM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சியில் பல நட்சத்திரங்கள் சீரியலில் பிரபலமாகி பின் சினிமா வாய்ப்பு கிடைத்த பின் அங்கேயே ஓடிவிடுவார்கள். அப்படி பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைகள் சினிமா படவாய்ப்புகள் கிடைத்து பிஸியாகி சீரியலை விட்டு விலகி வருகிறார்கள். அப்படி சமீபத்தில் பாரதி கண்ணம்மா ரோஷினி, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை, ஐஸ்வர்யா என நடிகைகள் படவாய்ப்பினால் சீரியலை விட்டு விலகினார்கள்.

அந்தவரிசையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரக்ஷிதா மகாலட்சுமி தொலைக்காட்சி நிறுவனத்துடன் பிரச்சனை காரணமாக வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு அவர் அப்படியெல்லாம் இல்லை என்று பதிலளித்து மழுப்பினார்.

ஆனால் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார். கன்னட படமொன்றில் கமிட்டாகி படப்பிடிப்பினை ஆரம்பித்துள்ளதால் சீரியலில் டேட் கொடுக்கமுடியவில்லை என்று கூறியுள்ளாராம். தற்போது கடந்த வாரத்தோடு அவரது கடைசி நாள் எபிசோட் முடிவடைந்த நிலையில், மகாவாக அரன்மனை கிளி என்ற சீரியலில் அறிமுகமாகிய மோனிஷா நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து சீரியலில் வளைக்காப்பு நிகழ்ச்சியின் பிரமோ வீடியோ சீரியல் குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே மோனிஷாவிற்கு நல்ல வரவேற்பும் ரசிகர்களும் இருந்துள்ளன.