முன்னாள் மாமனார் படத்தையே காப்பி அடுச்சிட்டாரே தனுஷ்! அண்ணன் போட்ட பிளான்..

dhanush annaamalai rajinikanth naanevaruven superstarrajinikanth
By Edward Mar 26, 2022 07:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சாயலை அவர் படங்களிலும் வைத்து வெற்றிப்படமாக்குவார். அப்போது தனுஷின் வளர்ச்சிக்கு ரஜினி தான் முக்கிய காரணம் என்ற பேச்சு அடிபட்டது.

ஆனால் அதை மறுத்த தனுஷ் என்னை வளர்த்து விட்டார்கள் என் அப்பா மற்றும் அண்ணன் மட்டும்தான். அதன் பிறகு என்னுடைய திறமையால் மட்டுமே நான் இந்த உயரத்திற்கு வந்தேன் என கூறியிருந்தார். தற்போது தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

மயக்கம் என்ன படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி பின் தனுஷ், செல்வராகவன் இணைகிறார்கள். நானே வருவேன் படம் வெளியாவதில் தொடர்ந்து பெரிய சிக்கல் நிலவி வருகிறது.

தற்போது இறுதி கட்டப்படப்பிடிப்பினை ஆரம்பித்துள்ள இயக்குனர் செல்வராகவ நேற்று படத்தின் முக்கிய போஸ்டரை வெளியிட்டிருந்தார். தனுஷ் புகைப்பிடித்து தள்ளும் படியான அந்த போஸ்டர் அண்ணாமலை படத்தின் சாயலைப்போன்றுள்ளது என பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.