எல்லைமீறி பேசி வந்த பயில்வான் ரங்கநாதன்.. எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சங்கம்

Bayilvan Ranganathan
By Kathick Jul 01, 2025 03:30 AM GMT
Report

பத்திரிகையாளரும், தமிழ் சினிமாவில் பிரபல நடிகருமானவர் பயில்வான் ரங்கநாதன். இவர் கொடுக்கும் பேட்டிகளில் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பல்வேறு விஷயங்களை பேசி வருகிறார்.

இது தொடர்ந்து வந்த நிலையில், பலரும் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர். இப்படியிருக்க பயில்வான் ரங்கநாதனை கண்டித்து நடிகர் சங்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எல்லைமீறி பேசி வந்த பயில்வான் ரங்கநாதன்.. எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சங்கம் | Nadigar Sangam Notice To Bayilvan Ranganathan

தொடர்ந்து இப்படி ஆதாரமற்ற அவதூறுகளை பேசி வந்தால், சட்டப்படி வழக்கு தொடரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்து இருக்கிறது. நடிகர்கள் பற்றி தொடர்ந்து ஆதாரம் இல்லாமல் அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும், நிறுத்த தவறினால் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி இருக்கின்றனர்.

மேலும், இந்த அறிக்கையில் 'இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடர்பான ஆபாசமான அவதூறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதம் இன்றி சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அறிக்கை இதோ:


Gallery