அந்த நடிகையுடன் டேட்டிங் செய்யும் சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா!! லீக்கான புகைப்படம்
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2021ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
இதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகர் நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் படத்தின் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசியமாக டேட்டிங்கில் இருந்து வருகிறார் என்று சில தகவல்களும் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களும் லீக்கானது.
இதுகுறித்து இருவரும் வாய்த்திறக்காமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் ஒரு புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இந்தியாவில் சமீபத்தில் எடுத்த டூர் புகைப்படம் தனித்தனியாக வெளியிட்டது வைரலானது.
தற்போது ஐரோப்பாவில் இருவரும் டேட்டிங் செய்து வருவது அம்பலமாகியிருக்கிறது. ஐரோப்பாவில் இருவரும் ரகசியமாக சென்றுள்ள புகைப்படத்தை தற்போது இணையத்தில் வைரலாக்கி நாக சைதன்யாவும் சோபிதாவும் விளக்கம் கொடுப்பார்களா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/4591870e-36a9-4d95-aa23-0a4164b6bb77/24-66612bf0eb854.webp)